எட்றா வண்டியெ by Vaa.Mu.Komu


எட்றா வண்டியெ
Title : எட்றா வண்டியெ
Author :
Rating :
ISBN : -
Language : Tamil
Format Type : Kindle , Hardcover , Paperback , Audiobook & More
Number of Pages : -

ஒரு வரியில் : மாறுபட்ட மொழிவழக்கு, மக்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கை அனைத்தையும் படிக்கும் பொழுது இனம் புரியாத மகிழ்வும் சிலிர்ப்பும் வருவதை தவிர்க்க முடிவதில்லை.

பொதுவா தமிழ் மக்கள் கலைகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் தருவோம் அது சினிமா, விழாக்கள், கதைகள், நாடகம், கூத்து இது மாதிரி பல, அதுல ஒரு சில விஷயங்கள் (அ) கதாபாத்திரங்கள் நம்மோட மனத விட்டு அவ்வளவு எளிதில் நீங்காது. அது போல சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் "எட்றா வண்டியே" வ, மு. கோமு எழுதியது. இவரோட கொங்கு தமிழுக்காகவே இவர் நாவல்களை படிக்கலாம். கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த ஒரு இடத்திலும் யாருக்கும் தனிப்பட்ட முன்னுரைகள் கிடையாது கதை ஓட்டத்தில் அவர்களின் செய்கைகள், பேச்சு இதைவைத்தே நம்மால் அவர்களை அடையாலபடுதிகொள்ள முடியும்.

ஜாதி துவேசம் அதிகம் இருக்கும் ஒரு கதை களத்தை கொண்டு நடக்கும் காதல் கதை தான் கரு, மற்றபடி இயல்பை மீறாத ஒரு நாவல். ஆனால் இந்த நாவலில் சித்தரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் "சரோஜா" இந்த பெண்ணை பற்றிதான் கடந்த வாரம் முழுதும் நினைத்துகொண்டிருகிறேன்.

சரோஜா தினக்கூலி வேலை செய்யும் ஒரு திருமணமான பெண். அப்பாவி கணவன் தறுதலையான ஒரு மகன். இவளுக்கு விருப்பம் இருந்தால் கூலி வேலைக்கு போவாள் மற்றபடி வீட்டில் இருப்பாள். இவள் தொழில் முறை விபச்சாரி கிடையாது ஆனால் தன்னுடைய விருப்பத்திற்காக பல ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறாள் அதுவும் இவள் விரும்பினால் தான். வேசி என்றதும் என் மனதில் நான் கேட்ட ஒரு பல விஷயங்கள், படித்தவை என்று பல எண்ணங்கள் இருந்தது ஆனால் அவர்கள் வேசி ஆகும் தருணம் தவிர்த்து குடும்ப சூழலில் தாயாகவும், மனைவியாகவும் இல்ல பக்கத்து வீட்டு அக்காவாகவும் அவர்களின் தின வாழ்கை என்ன, எப்படி அவர்கள் மற்றவர்களுடன் தோழமையாக இருகிறார்கள் என்று அழகாக சொல்லபட்டிருகிறது இந்த காரணம் தான் சரோஜா மனதில் ஒட்டிகொண்டதர்க்கு. குடிப்பதற்கு முன் அவள் முட்டையை வறுக்கும் அந்த நிகழ்விலேயே அவளின் அணுகுமுறை, பொருளாதார சூழ்நிலைன்னு பல விஷயங்களை புரியவைத்துவிடுகிறது இந்த நாவல்.

இது போன்ற மாறுபட்ட மொழிவழக்கு, மக்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கை அனைத்தையும் படிக்கும் பொழுது இனம் புரியாத மகிழ்வும் சிலிர்ப்பும் வருவதை தவிர்க்க முடிவதில்லை.