
Title | : | Genghis Khan (Tamil) |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | 184 |
Publication | : | First published January 1, 2008 |
Genghis Khan (Tamil) Reviews
-
புது ஆண்டின் முதல் வாசிப்பு.
எத்தனை நாட்கள் தான் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் என்று குண்டு சட்டியில் குதிரை ஒட்டி கொண்டிருப்பது. கொஞ்சம் எல்லை தாண்டுவோமே என்று முடிவு செய்தபோது வாங்கிய புத்தகம் செங்கிஸ்கான்.
நம்மில் 10ல் ஒருவர் செங்கிஸ்கான் வம்சாவளியை சேர்ந்தவர் என்ற தகவலோடு புத்தகத்தின் முன்னுரையே அமர்க்களம்.
சிதறுண்டு கிடக்கும் மங்கோலிய இனமக்கள். அத்துணை இனத்தவர்களையும் ஒன்று திரட்டி ஒரு குடையின் கீழ் அரசாண்ட டெமுஜின் என்னும் செங்கிஸ்கான் பற்றிய ஒரு சுருக்கமான விறுவிறுப்பான ஒரு கோப்பாக அமைந்துள்ளது.
வழக்கமாக இது போன்ற புத்தகங்கள் எல்லாம் ரொம்ப ராவாக இருக்கும். அதாவது raw data வாக இருக்கும். படிக்க மிகவும் bore அடிக்கும். நானும் அந்த எண்ணத்துடன் தான் இந்த புத்தகத்தை படிக்க துவங்கினேன். ஆனால் ஆரம்பமே வெகு சுவாரசியமாக இருக்கிறது. செங்கிஸ்கான் பிறந்தார். வளர்ந்தார். நாடுகளை வளைத்தார் . சமூக அமைப்புகளை உருவாக்கினார் என்று பள்ளி சமூக அறிவியல்(Social Science) புத்தகம் போல் இல்லாமல் தடதடக்கும் வேகத்தில் சாமான்யனுக்கும் புரியும் வகையில் ஆசிரியர் அமைத்திருக்கிறார். என்ன, ஆங்காங்கே வரும் வித்தியாசமான இனப்பெயர்கள் சற்று குழப்பமாக இருக்கின்றது. வேறொரு நாட்டை, வேறொரு கலாச்சாரத்தை படிக்க முற்படும் பொழுது இதை போன்ற சிறு சங்கடங்கள் இருக்கதான் செய்யும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு படிக்க ஆரம்பிசீங்கண்ணா ரெண்டு நாள் போதும் முடிக்க. :)
ஐந்து நட்சத்திரங்கள். :) -
ஆனன் ஆற்றங்கரையிலிருந்து தனது பதினான்காம் வயதில் டெமுஜின்(செங்கிஸ்கான்), சிறு சிறு இனக்குழுவாக இருந்த மங்கோலியர்களை இனைத்து ஒன்றுபட்ட தேசமாக மாற்றவேண்டும் என்ற இலட்சியத்தோடு கிளம்பி, பின் அதனை நிறுவியும் காட்டினார்.
நாம் பேரரசர்கள் என்று நினைக்கும் ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன் இவர்களை விட பலமடங்கு பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார் செங்கிஸ்கான்.
அதற்காக அவன் அழித்த உயிர்கள் பல இலட்சம்.
சிந்து நதிக்கரை வரை வந்த அவன் இந்தியாவிற்குள் வந்திருந்தால், அவனது கொடிய பசிக்கு இந்தியா இறையாகியிருக்கும்.
பேரரசுகள் இரக்கமற்றது!!! -
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். For more visit:
https://www.youtube.com/watch?v=YydNO... -
மெர்கிட் என்ற மங்கோலிய இனத்தைச் சேர்ந்த சிலுடு தனது புது மனைவியான ஹோலுன் உடன் சிறிய ரதத்தில் சில பாதுகாவலர்களுடன் சென்று கொண்டிரு���்கும் போது போர்ஜிகின் என்ற இன்னொரு எதிரி குழுவினர் அவர்களை தாக்குவதற்கு விரட்டுகிறார்கள். பெண்களையும் எதிரிகளின் கால்நடைகளையும் அபகரிப்பதேயே வெற்றியாக கருதுபவர்கள் மங்கோலியர்கள். அதனால் ஹோலூனை விட்டுட்டு தப்பித்து சென்று விடுகிறான் சிலுடு. யெசுகெய் என்ற அந்த குழுவின் தலைவன் ஹோலூனை அபகரித்து மனைவியாக்கி கொள்கிறான். அவனுக்கு ஹோலுன் ஒரு ஆண்மகனை பெற்றுத்தருகிறாள். அந்த குழந்தையின் உள்ளகையில் சிறிதாக ரத்தம் கட்டியிருக்கிறது. ஹோலுன் அதைப் பார்த்து பயந்து போகிறாள். ஆனால் பிரசவ கூடாரத்திற்கு வந்திருந்த ஒரு வயதான மந்திரவாதி குழந்தையின் உள்ளங்கையைப் பார்த்துவிட்டு, "இது சாதாரண குழந்தை அல்ல. இந்த உலகையே தன் வீரத்தால் வெல்லப் பிறந்தவன். பேரரசன்" என்கிறார்.
மேலே சொல்லியிருக்கும் காட்சிக்கு அட்டகாசமான பிஜிஎம் சேர்த்தால் அசத்தலான ஹீரோ அறிமுக காட்சி போல இருக்கும். இப்படித்தான் தொடங்குகிறது முகில் அவர்கள் எழுதியிருக்கும் "செங்கிஸ்கான்" புத்தகம்.
உணவில் விஷம் வைத்து வஞ்சகமாக தந்தை கொல்லப்பட்ட பிறகு வறுமையில் உழன்று, இன்னொரு இனக்குழுவிடம் அடிமையாக சிக்கி உயிர் பிழைத்து என்று இளமைக்காலம் முழுதும் இன்னல்களை கடந்து பல லட்சம் மக்களை கொண்டு குவித்து ஒன்றுபட்ட மங்கோலிய சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியிருக்கிறார் செங்கிஸ்கானாக மாறிய டெமுஜின்.
சமீபத்தில் Netflix-ல் "Marco polo" என்ற வெப் சீரிஸ் பார்த்தேன். செங்கிஸ்கானின் பெயரை முன்பே கேள்விப்பட்டிருப்பினும் இந்த தொடரில் அவரைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டார்கள். செங்கிஸ்கானின் பேரனான குபலாய் கானின் ஆட்சிக்காலத்தில் நடக்கும் சம்பவங்களே Marco Polo தொடரின் கதைக்களம். அதுவே மங்கோலியா குறித்தும் செங்கிஸ்கான் குறித்தும் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வதைத் தூண்டியது. அந்த தொடரைப் பார்க்கும் போது எனக்கு தோன்றிய பல கேள்விகளுக்கான பதில் இந்த புத்தகத்தில் கிடைத்தது. குறிப்பாக அரண்மனையை தவிர மற்ற இடங்களில் வசிப்பவர்கள் கூடாரங்களில் வசிப்பவர்களாகவே காட்டப்பட்டது. ஒரு வேளை பட்ஜெட் பிரச்சனையோ என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் பெரும்பாலும் கூடாரங்களில் வசிப்பவர்களே, தங்கள் வாழ்விடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பவர்களே என்பதை புத்தகத்தை வாசித்தப் பிறகே தெரிந்து கொண்டேன்.
புத்தகம் வாசிப்பதற்கு முன்பு செங்கிஸ்கான் என்பவன் இரக்கமற்றவன், கொடூர கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவன், போர் வெறிப் பிடித்தவன் என்பது போன்ற பிம்பமே செங்கிஸ்கான் மீது எனக்கு இருந்தது. ஆனால் பல கிறுக்கு ராஜாக்களுக்கு மத்தியில் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களை கண்ணியமாகவே நடத்தியிருக்கிறான் என்பது தெரிகிறது. ஆனால் படையெடுத்து சென்ற இடங்களில் தன்னிடம் அடிபணியாத மக்களை கொன்று குவித்து ரத்த ஆற்றில் நீந்தியிருக்கிறான்.
முகில் அவர்கள் எழுதிய சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறான "கண்ணீரும் புன்னகையும்" புத்தகத்தை 2013-ல் சென்னை அண்ணா நூலகத்தில் வாசித்தேன். அவரது "நம்பர் 1" தொடரினை விகடனில் சில வாரங்கள் வாசித்திருக்கிறேன். சென்ற வருட புத்தகத் திருவிழாவில் அவரிடம் கையெழுத்துப் பெற்ற "பயண சரித்திரம்" புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய இரண்டு நாட்களில் லாக்டவுன் அறிவிக்க அடுத்த வாரம் சென்னை திரும்பியவுடன் வாசித்துக் கொள்ளலாம் என்று வைத்துவிட்டு வந்தேன். அந்த புத்தகம் சென்னை அறையில் அப்படியே இன்னும் பத்திரமாக இருக்கிறது. அதனை சென்னை திரும்பியவுடன் தான் வாசிக்க வேண்டும். அவரது அட்டகாசமான எழுத்து நடை மிகவும் பிடித்துப் போனது.
புத்தகத்தை படித்து முடித்த போது ஒரு திரைப்படம் பார்த்து முடித்த உணர்வே எழுந்தது. ஒரே சிட்டிங்கில் வாசித்து முடித்துவிடலாம். -
செங்கிஸ்கான் பற்றி நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையுடன் பட��க்க தொடங்கினேன். முகிலின் இந்த புத்தகம் செங்கிஸ்கான் பற்றிய முக்கிய விஷயங்களை மட்டுமே தந்துள்ளது. மாபெரும் பேரரசை உருவாக்க அவன் மேற்கொண்ட உத்திகள், போர் தந்திரங்கள் எதுவும் விவரமாக கூறப்படாதது மிகுந்த ஏமாற்றத்தைத்தான் தருகிறது.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்த புத்தகம் செங்கிஸ்கானின் வாழ்க்கை வரலாறு அல்ல, வாழ்க்கை குறிப்புகளின் தொகுப்பு மட்டுமே.
Total Rating: 4 / 10 -
உலகத்தை வெல்ல பயணத்தை தொடங்கி பாதியில் நின்ற மனநலம் குன்றியவன் முன்கதையை விவரிக்கிறது இந்த நூல். "என் பின்னே வா, அல்லது பரலோகம் போ" என்பதே இவன் வாழ்வின் சாரம்.
மற்றவர்களின் நாடு பிடிக்கச் சென்று போரில் இறக்கிறான் மகளின் கணவன், இதுவரை கொன்று குவித்த உயிர்கள் போதவில்லை எனவே மகளிடம் அவளின் கண்ணீருக்கு பழி தீர்த்துக் கொள்ள அனுமதியளிக்கிறான். கருணையே வடிவான மகளும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என்ற பாரபட்சம் ஏதுமின்றி அனைவரையும் இறந்து போன கணவனுடன் சேர்த்து வழியனுப்புகிறாள். "எனக்கு வந்தா ரத்தம், உனக்கு வந்தா தக்காளி சட்னி".
இந்த கொடூர கொலைகார கும்பலை மிருகங்கள் என்றால், மிருகங்கள் பாவம்!
ஒரு நல்ல வாசிப்பாக இந்த நூல் இருக்கும். முதல் சில அத்தியாயங்கள் மங்கோல் திரைப்படத்தின் திரைக்கதையின் நகல் போல இருப்பதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். -
செங்கிஸ்கான்
******************
உலகம் முழவதும் மண்ணாசை கொண்ட பேரரசர்கள், சர்வாதிகாரிகள் எல்லா காலத்திலும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்....
நல்லாட்சி புரிந்து போற்றதலுக்குரிய அரசர்களை எப்படி வரலாறு தன் நினைவில் தக்க வைத்துள்ளதோ., அதே போல மண்ணாசையால் பல போர்கள் புரிந்து பல்லாயிரக் கணக்கான போர் விரர்களை கொன்று, பலி கொடுத்து..அதன் தொடர்ச்சியாக பல லட்சக்கணக்கான மக்களை கொன்று பேரரசுகளை நிறுவிய மன்னர்களையும் நினைவில் தக்க வைத்திருக்கிறது...
2000களில் ஒரு ஆய்வின் மூலம் தெரிந்த தகவல்., கிழக்கு ஐரோப்பா முதல் பசிபிக் கடல் வரை கிட்டதட்ட 1,60,00,000 ஆண்களின் மரபணு கூரு ஒன்றாக உள்ளது என்பதுதான் அது. அதாவது அந்த நிலப்பரப்பில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 200ல் ஒருவர் ஒரே மரபணு கூரை கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்த மரபணுவிற்கு சொந்தகாரர், #செங்கிஸ்கான்.
இன்றிலிருந்து கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன் மங்கோலிய நிலப்பரப்பில், ஒரு சாதாரண இனக்குழுவின் தலைவனுக்கு மகனாக பிறந்தார், #டெமுஜின்(செங்கிஸ்கானின் இயற்பெயர்).
அப்போது, மங்கோலியா என்பது ஒரு தேசமாக இல்லாது, பல நூற்றுக்கணக்கான, ஒன்றுக்கு ஒன்று தாக்கிக் கொல்லும் இனக் குழக்களின் நிலப்பரப்பாகவே இருந்திருக்கிறது.
அப்படிப்பட்ட இனக்குழுக்களை ஒன்றாக இணைத்து ஒரே மங்கோலிய தேசமாக கட்டியெழுப்ப வேண்டுமென்பதே, செங்கிஸ்கான���ன் வேட்கையாக இருந்தது. அதற்கு இசைந்த இனக்குழுக்களை வரவேற்றும், எதிர்த்த இனக்குழுக்களை அழித்தும், பல்லாயிரக்கணக்கான வீரர்களின் பிணத்தின் மேல் வளர்த்தெடுக்கப்படுகிறது, மங்கோலியா எனும் தேசம்...
மங்கோலிய தேசம் உருவான பின்னும் மண்ணாசை விடாதபடியால், வடக்கே ருசியா, தெற்கே சினா, மேற்கே ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என எட்டி பிடிக்க ஆரம்பித்தார்...அவரது காலத்திற்கு பின் அவரது மகன்கள்,பேரன்கள் மேலும் பறந்து விரிந்து கைப்பற்றி
மங்கோலிய பேரரசாக உருவாக்கினர்.
செங்கிஸ்கானின் குதிரைப்படைகளை தடுப்பதற்காக சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டிருந்தாலும், சீன தேசம் முழுமையாக வீழ்ந்தது, செங்கிஸ்கானின் வம்சத்தவரான குப்லா கானிடம்.
இமயமலையை கடக்க முடியாததால் பாரதப் பகுதி மங்கோலியர் வசப்படவில்லை.
மாவிரன் அலெக்சாண்டர் கைப்பற்றிய நிலப்பரப்பைவிட நான்கு மடங்கு அதிக நிலப்பரப்பை கொண்டது மங்கோலிய பேரரசு. கிட்டதட்ட 200 ஆண்டுகாலம், செங்கிஸ்கானின் வம்சத்தவரால் ஆளப்பட்ட அப்பேரரசு 14ம் நூற்றாண்டு வாக்கில் சரியத் தொடங்கியது. ஆனாலும் செங்கிஸ்கான் எனும் வீரனின் வேட்கை, ஒன்று பட்ட தேசம் என்ற ஆசை நிலைத்து உண்மையாக நின்றுவிட்டது.
செங்கிஸ்கான் பற்றிய முதல் தமிழ் புத்தகம் இது. இனக்குழக்களின் பெயர்கள் சற்றே குழப்பம் தருபவையாக இருந்தாலும், வரலாறை சுவாரசியமாக கொண்டு சென்ற எழுத்து நடையால் படிப்பதில் தொய்வு ஏற்படவில்லை.
இதில் செங்கிஸ்கான் எனப்படும் டெமுஜினின் பிறப்பு, வளர்ந்த விதம், சகோதரர்கள், நண்பர்கள், வீரம், போர்தந்திரம்
முதல் இனக்குழுக்களை ஒன்றிணைத்தல், அதற்கான படுகொலைகள், போர்கள் என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இனக்குழக்களின், உணவு முறைகள், பிற இனங்களை கொள்ளையடித்தல், பெண்களை கவர்தல் என மங்கோலிய இனக்குழுக்களின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.
180 பக்கங்களுக்குள் செங்கிஸ்கானின் வரலாற்றை சுருக்கிவிட முடியாதென்றாலும், சுருங்கச் சொன்னாலும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது இந்நூலில். அதில் மிகையுமல்ல.! -
Intresting reading...
After watching Marchopolo in Netflix, I was attracted towards Mongalians history.Genghis Khan united and created Mongolians.So want to know more about him.This book tells complete life history of Genghis Khan.I like the way author narrated the history as story. -
உலகின் எல்லா மிகப் பெரிய சாம்ராஜியத்துக்கு பின்னும் நியாயம் கற்பிக்கும் கதை ஒன்று இருக்கும். அப்படியே இந்த புத்தகமும் பயணிக்கிறது. அலெக்சாண்டரின் பேரரசைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதும், கிரேக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு பெரியதுமான மங்கோலியப் பேரரசின் சர்வ வல்லமைப் படைத்த மன்னன் தான் செங்கிஸ் கான்.
போர்ஜிகின் இனக்குழுவின் தலைவன் யெசுகெய்க்கும் இன்னொரு இனக்குழுவின் தலைவன் சிலுடுவின் மனைவி ஹோலுனுக்கும் பிறந்த மகன் டெமுஜின்! உள்ளங்கையில் ரத்தக்கட்டுடன் பிறந்த குழந்தை இந்த் உலகை ஆளும் பேரரசனாய் பிற்காலத்தில் உருவெடுக்கும் என்ற சொற்களோடு பயணிக்கிறது புத்தகம்.
இன்னும் நிறையப் புத்தக வாசிப்பு வேண்டும் இவரைப் பற்றி என்று நினைக்கத் தோன்றியதில் வியப்பேதும் இல்லை என்றே தோன்றுகிறது. இது செங்கிஸ் கான் பற்றிய அறிமுகப் புத்தகம் என்பதாலேயே அவரின் பால் சற்றெ கூடுதல் பற்றோடு பக்கங்கள் நகர்வது நன்றாகத் தெரிகிறது. சிதறிக் கிடந்த மங்கோலியர்களை தன் அறிவாலும் வீரத்தாலும் ஒன்றிணைத்து மாபெரும் பேரரசை நிறுவியதில் கானின் பங்கு மிகவும் பெரிது.
ஆனால் இவ்வளவு பெரிய அரசை நிர்��ானிக்க எவ்வளவு பலிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதற்கு சான்று நிஷாப்பூர் மற்றும் மத்திய ஆசியப் போர்தான். 33,00,000 மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்பதாக வரலாறு சொல்கிறது. மொத்தம் ஒன்றரை கோடிக்கும் மேல் மக்களை கொன்று குவித்திருக்கக் கூடும் என்று குறிப்புக்கள் சொல்கின்றனவாம். நவீன உலகின் கொடுங்கோளர்கள் யாரும் நெருங்க கூட முடியாத பேரரசன் செங்கிஸ் கான்.
மங்கோலியர்கள் இறந்த ���டல்களை புதைக்கவோ எரிக்கவோ மாட்டார்கள். மாறாக மலை உச்சியில் போட்டு இயற்கைக்கு படைத்து விடுகிறார்கள். இயற்கையை வழிப்பட்ட ஒர் மனிதக்கூட்டம் மங்கோலியர்கள். மலையயும், நதியையும் உயிராய் போற்றியவர்கள். ஓநாய்களை மிகப் பெரிய சக்தியாய் பார்த்தவர்கள்.
தன் இள வயது சோகங்களை பகிர்ந்த நண்பன் ஜமுக்காவையே கொல்ல நேர்ந்த துயரம் கானுடையதாக சொல்லப்படுகிறது. இருவரும் சேர்ந்தே கனவு கண்டனர். கனவு - ஒன்றுப்பட்ட மங்கோலிய நாடு. கனவு மெய்ப்பட இருந்த நேரத்தில் பொதுவாக ஏற்படும் போராட்டங்கள் தான் இங்கேயும் நிகழ்கிறது. ஆங் கான் தான் கானாக(அரசர்களின் அரசர்) இருந்தார். அவரிடமிருந்தும் மற்ற இனக்குழுக்களிடமிருந்தும் எப்படி வீரமும் விவேகமுமாய் தன் கனவை நிறைவேற்றிக் கொண்டார் செங்கிஸ் கான் என்பதாக பக்கங்கள் உருண்டோடுகிறது.
வரலாற்றின் பக்கங்களில் எப்போதுமே முதல் அடிக்கான காரணம் சரியாகவே இருக்கும். ஆனால் கால சுழற்சியில் அந்த காரணம் நீட்சி அடைந்து பொறாமையும் பதவி வெறியுமே எஞ்சி நிற்கும். இது செங்கிஸ் கானுக்கும் பொருந்தும். முதலில் மங்கோலிய ஒற்றுமைக்கென ஆரம்பித்து பின்னர் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பொருட்டு வெட்டப்பட்ட தலைகள், குருதி கொப்பளிக்கும் போர்க்களங்கள் என்றும் எதிரிகள் மேல் ஈவு இரக்கம் கொள்ள கூட மனம் இல்லாமல் மாற்றம் அடைந்த செங்கிஸ் கானின் வரலாற்று படிமங்கள் தூசு தட்டப்பட்டு உள்ளன.
முகில் அவர்களின் மற்ற புத்தகங்களை நான் இது வரை படிக்கவில்லை. வரலாற்று குறிப்புகளையே எழுதி இருக்கிறார். சில இடங்களில் செங்கிஸ் கானின் மனித உருவையும் காண்பிக்க முயன்றாலும், கானின் இரக்கமற்ற கொலைகள் தான் எப்போதும் மனதில் அலையடித்து போகிறது. மாலிக் கபூரின் படைகளால் கொல்லப்பட்டார் செங்கிஸ் கான் என்று இணைய தளத்தில் உள்ளது. அதுவும் உண்மை என்று ஊர்ஜிதப்படுத்தி விட முடியாது. ஆசிரியர் எப்படி இறந்தார் என்ற குறிப்பை சொல்ல வில்லை.
எல்லா பேரரசனின் வாழ்வில் வரும் துயரம் செங்கிஸ் கானின் வாழ்விலும் வந்துள்ளது. தனக்கு பின்னர் யார் இவ்வளவு பெரிய அரசை கட்டி காக்கப் போகிறார்கள் என்பதுதான். அவரின் நான்கு பிள்ளைகள் பிற்பாடு தலைஎடுத்து வாழ்ந்து வீழ்ந்து இருக்கிறார்கள்.
அநேகமாக எல்லா போர்களிலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களை விட்டு விடுவார்கள��. ஒரு பிரமாண்ட சீனாப் போரில் அனைவரையும் கொன்று குவித்தார்கள். குழந்தைகள் பெண்கள் இவர்களை கொலை செய்தது செங்கிஸ் கானின் மனதை வருத்தியது. அதனால் இந்த போரில் அப்படி எதுவும் செய்ய வில்லை. எதிரிகளின் தலையை மட்டும் உடலிலிருந்து பிரித்து விட்டனர்...
செங்கிஸ் கான் யாரென்று தெரிந்து கொள்ள ஓர் ஆரம்ப நிலை புத்தகம். வாசித்து பாருங்கள். -
ஒரு இனக்குழுவின் தலைவரின் மகன், தன் தந்தையின் பெயரில் மற்றவர்களின் உதவி எனும் போது எப்படி அவரை சாமானியன் என்று சொல்வது?
தன் நண்பனின் கனவை தனதாக்கிக் கொள்வது, ஒரு நாட்டின் மேல் இவருக்காக, படையெடுத்து செல்பவரை அந்த நாட்டை சேர்ந்தவர் போரில் கொன்று விட்டால், செங்கிஸ்கான் இன்னொருவரை பழி தீர்த்து வா என்று அனுப்புவது - இவரின் மேல் எந்த ஈர்ப்பையும் தரவில்லை. அவ்வளவு பெரிய நிலப்பரப்பை கைப்பற்றி ஆண்டதை தவிர.
இந்து வியாபாரிகளைத் திரட்டினார் - அந்த காலத்தில் இந்து என்ற மதம் இருந்ததா? -
A must read
Amazing detailing and descriptions.. Can't keep the book down without completing.. Awesome. A must read for everyone.. Definitely a good read -
Please hear the complete review
https://youtu.be/YydNOLfbSSc -
சிறுவனாக வயல்வெளிகளில் ஓடியாட வேண்டிய வயது! மேலும், சில சிறுவர்களை சேர்த்து கொண்டு விதவிதமாக விளையாடி கொண்டிருக்க வேண்டிய பருவம்! இவற்றை எல்லாம் உதறிவிட்டு, ஒரு கூட்டத்தின் நன்மைக்காக, தனது தந்தையால் இளவயது திருமணம் செய்து வைக்கபட்டு வேறு ஒரு இடத்துக்கு அனுப்பபடுகிறான் ஒரு சிறுவன் பின்னாளில் ஆசியாவை வக்கிரமாக ஆண்டான் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? கடினம்தான்! அப்படி நீங்கள் ஏற்று கொள்ள கூடிய ஒருவன்தான் இருக்கிறான்! அவன் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த பேரரசர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான பிரமிப்பும் மிரட்சியும் கொஞ்சம்கூட குறையவில்லை. காரணம், அவரது போர்த்திறன், ஆளுமை, வலிமை. நூற்றாண்டுகள் பல கடந்தாலும் மங்கோலியா என்ற தேசத்தின் ஒரே ஐகான் அவரே.
அவர் பிறந்தது சாதாரணமான ஒரு மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில். அப்போது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. சிதறிக் கிடக்கும் நாடோடிக் கூட்டங்களை எல்லாம் ஒன்றிணைத்து ‘மங்கோலியா’ என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே செங்கிஸ்கானின் கனவு. செய்து காட்டினார். தன் துணிச்சலாலும் துடிதுடிப்பாலும் உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் மங்கோலியப் பேரரசையும் அமைத்தார். மாவீரன் அலெக்ஸாண்டரின் பேரரசைவிட செங்கிஸ்கான் அமைத்த பேரரசு நான்கு மடங்கு பெரியது.
அவருக்குப் பின் அவருடைய வாரிசுகள் ராஜ்ஜியத்தை மேலும் விரிவாக்குவதில் பெரும் வெற்றி கண்டனர். உலகம் செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாக பார்த்த போது, மங்கோலியா அவனை தங்களின் இணையற்ற தலைவனாக பார்த்தது. -
செங்கிஸ்கானின் தோற்றம் முதல் மறைவு வரையான வரலாற்று தகவல் தொகுப்பே இந்த புத்தகம்.
டெமுஜின் சிறு வயதில் தந்தையை இழந்த பிறகு குடும்பத்தின் தலைமை பொறுப்பை ஏற்று குடும்பத்தின் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய உழைத்தான். சிறு சிறு இன குழுக்களாக வாழ்ந்த மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றுப்பட்ட மங்கோலியாவை உருவாக்க வேண்டும் என தனது நண்பனுடன் இணைந்து சபதமெடுத்தான். தனது மனைவியை கடத்தி சென்றவர்களுக்கு எதிராக முதல் முதலில் போர்க்களம் சென்றான் டெமுஜின். அடுத்தடுத்து நடைபெற்ற சிறிய போர்களில் வெற்றி கண்ட டெமுஜினின் மனிக்கும் குணம், எதிரிகளை தனது சகோதரனாக ஏற்றுக்கொள்வது, ஏதாவது ஒரு பதவியை அவர்களுக்கு அளிப்பது போன்ற நல்ல குணம் மக்களை கவர்ந்தது. இதுவே மக்கள் அவர் ஒன்றுபட்ட மங்கோலியாவின் கானாக பதவி ஏற்றபோது அவருக்கு செங்கிஸ்கான் என்ற பட்டம் கொடுத்து பெரு மகிழ்ச்சியடைய காரணமானது. அடுத்தடுத்து இவர் தலைமையில் நடந்த பல போர்கள் இவரின் வீரம் உலகறிய செய்தது. சீனா, மத்திய ஆசியா முழுவதும் செங்கிஸ்கான் கைப்பற்றினார்.
செங்கிஸ்கானின் தலைமையில் மங்கோலிய பேரரசு ஒரு நாட்டின் மீது படையெடுத்து வருகிறது என்பதை கேள்விப்பட்டவுடன் ஒன்று சண்டையிட்டு சாக வேண்டும் இல்லை சரணடைய வேண்டும் என்ற இரு முடிவுகளில் ஏதேனும் ஒன்றே அந்த நாட்டுக்கு கிடைத்தது.
-கலைச்செல்வன் செல்வராஜ். -
Good Introduction to Ghengishkhan.
Nicely paced book, written like a historic novel with any astounding details. But after a point it looses its paces becomes like a book with just the historic details. -
Very good book well written by author...
-
Biography of senkiskaan in Tamil
-
Best
The author has potrayed genghis khan and the history in such a way that one can picturize the people and the incidents while reading