
Title | : | சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0: Sirikka Sirikka Sariththiram 1.0 (Tamil Edition) |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Language | : | Tamil |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | 47 |
Publication | : | Published April 12, 2020 |
உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பைத் தூண்ட உதவும் நூல் இது. 1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்தரம் அடைந்தது. உலகத்தைக் கடல் வழியாக முதன் முதலில் வலம் வந்தவர் மெகல்லன். முதலாம் பானிபட் போர் 1526-ம் ஆண்டு நடைபெற்றது. உலகில் ஏழாவதாகக் கண்டறியப்பட்ட கண்டம் அண்டார்டிகா... இவை மட்டும் வரலாறு அல்ல. இவை நம் பாடப்புத்தகத்தில் நிரம்பியுள்ள வரலாற்றுத் தகவல்கள். உண்மையில் வரலாறு என்பது அவ்வளவு சுவாரசியமானது, சுவையானது, சிலிர்ப்பூட்டுவது, அச்சமூட்டுவது, நெகிழச் செய்வது, மகிழச் செய்வது, கலகலவெனச் சிரிக்கவும் வைப்பது. புன்னகை தரும் வரலாற்றுப் பக்கங்களை மட்டும், நாம் இந்தப் புத்தகத்தில் படிக்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம்.
சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0: Sirikka Sirikka Sariththiram 1.0 (Tamil Edition) Reviews
-
சரித்திரத்தில் நடந்த சில நகைச்சுவைகளை துணுக்குகளாக எழுதியுள்ளார். ஜெய்ப்பூர் ராசா ஒருவர் கங்கை நீரில் தான் குளிப்பார் என்ற ஒன்று மட்டும் எங்கேயோ படித்ததாக ஞாபகம். மற்றவை எல்லாமே எனக்கு புதிய தகவல்கள் தான்.
குவாலியர் ராசாவின் உணவு மேஜையின் நடுவே மினி ரயில் Japanese Resto Sushi King ஞாபகப்படுத்தியது. -
ச(சி)ரித்திரம்.
உணவருந்தும் மேடையில் ரயில் வண்டி, காசி தண்ணீரில் மட்டுமே குளிக்கும் வழக்கம் கொண்ட ராஜா, அமெரிக்கர்களின் தக்காளி பயம், ஒலிம்பிக்சில் ஒரு விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் அனைத்தையும் ஒரே நாடு வாங்கியது, சாக்லெட்டை கண்டுபிடித்த குரங்குகள் என்று சுவாரசியமான தொகுப்பு (அ) துணுக்குகள்.
இன்னும் கொஞ்சம் பக்கங்கள் இருந்திருக்கலாம் என்று புத்தகம் முடியும் பொழுது தோன்றுகிறது. -
Mn